சீனாவில் வவ்வால் விற்பனை அமோகம்...!

சீனா, கொரோனா, கொரோனாவைரஸ், வவ்வால், விற்பனை, சந்தை, பாகிஸ்தான், சந்தை, china, corona, coronavirus, bat sales, batsபீஜிங்: கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே போகின்றது. கொரோனாவால் உலகமெங்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,21,903 ஆக உள்ளது.

முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவான சீனாவில் சுமார் 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதோடு 3,300 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனாவில் இருந்து சுமார் 75 ஆயிரம் பேர் குணமடைந்ததோடு, நோய்த் தொற்று பரவுவது மிக மிகக் குறைவாக உள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் இரண்டு வாரங்களில் ஒரு புதிய நோயாளிகள் கூட கண்டறியப்படவில்லை என்றனர்.

ஆனாலும் கொரோனா முற்றிலும் சீனாவை விட்டு நீங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 3000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ், வவ்வால் மூலமாகப் பரவியிருக்கும் எனப்படுகிறது. மேலும் உலகின் பல பகுதிகளில் பலரும் வவ்வால் உள்ளிட்ட பல விலங்குகளைச் சாப்பிடுவதை வலுவாக எதிர்த்து வீடியோ பதிவிட்டனர், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அக்தர், ஏன் வவ்வால் போன்றவற்றைச் சாப்பிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

சீனாவில் கோவிட்-19 தொற்று குறைந்துள்ளதால் பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விதமாக சந்தைகளில் வவ்வால், நாய், பூனை உள்ளிட்ட பல விலங்குகள் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளன. மக்களும் ஆர்வத்துடன் அதனை வாங்கிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. சீனாவின் பல பகுதிகளில் சிறப்பு சலுகையில் நேற்று பல மாமிசங்கள் விற்கப்பட்டது. குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக சிறப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கொரோனாவுக்கு முன்னதாக எவ்வாறு சந்தைகள் இயக்கப்பட்டதோ அதேபோல் தான் இப்போதும் உள்ளது. ஆங்காங்கே சிறிய சோதனைகள் நிகழ்த்தப்படுகிறது. எல்லோரும் கொரோனா ஓய்ந்துவிட்டது இனிமேல் இது வெளிநாட்டினர் பிரச்னை என அங்குள்ள ஒருவர் கூறினார்.

கொரோனா, சீனா வைரஸ் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். அமெரிக்க ராணுவம் தான் சீனாவில் கொரோனா வைரஸை பரப்பியது என சீனா தெரிவித்தது. இப்படியாக சீனா-அமெரிக்கா இடையே சர்ச்சை வெடித்தது. அமெரிக்கச் செய்தியாளர்களை வெளியேற்ற சீனா முடிவு செய்வது என இக்கொடிய நோய்த் தொற்று உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Comments