கொரோனா - மக்களை பாதுகாக்கும் பணியில் முன்னிலையில் திமுக

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கவும் அனைத்து கட்சி மற்றும் அரசு தனது பங்களிப்பை ஏற்று வருகிறது.

தமிழகத்தில் எதிர்கட்சியாக இருந்தாலும் மக்கள் நலன் சார்ந்த அனைத்திலும் முதலாவதாக முன்மாதிரியாக திகழும் திமுக, இந்த கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் பணியிலும் தன்னை முன்னிலை படுத்தி இருக்கிறது. தனது சட்டமன்ற மற்றும் நாடாளும் மன்ற உறுப்பினர்களின் நிதியில் இருந்து கோடிக்கணக்கான தொகையை கொரோனா நிவாரண பணிக்கு ஒதுக்கி அந்த பணி சிறப்புடன் நடைபெறுகிறதா என்பதை நேரில் சென்று பார்வையிட சம்மந்தப்பட்ட உறுப்பினர்களை பணித்திருக்கிறது திமுக தலைமை.

அதன் படி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கிய கொரோனா நிவாரண நிதியின் விவரம் :

திரு.வெங்கடேசன் MP -ரூபாய் 56.17 லட்சம் மதுரை தொகுதி 
திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன் MP - ஒரு கோடி ரூபாய் தென் சென்னை தொகுதி 
திரு.ஞானதிரவியம் S MP - ரூபாய் 60லட்சம் நெல்லை தொகுதி 
திரு.சண்முகம் MP - ரூபாய் 50 லட்சம் பொள்ளாச்சி தொகுதி 
திரு.வைகோ MP - ரூபாய் 1 கோடி
திரு.K. சுப்புராயன் MP - ரூபாய் 50 லட்சம் திருப்பூர் தொகுதி 
திரு.SS பழனிமாணிக்கம் MP - ரூ.5 கோடி தஞ்சை தொகுதி 
திரு.கவுதம் சிகாமணி MP - 20 லட்சம் கள்ளக்குறிச்சி தொகுதி 
செல்வி.ஜோதி MP - ரூபாய் 1,32,71,940 கரூர் தொகுதி 
திரு.P. R. நடராஜன் MP - ரூபாய் 1 கோடி கோவை தொகுதி 
திரு.திருமாவளவன் MP - ரூபாய் 1,26,61000 சிதம்பரம் தொகுதி 
திரு.செந்தில்குமார் MP - ரூபாய் 1 கோடி தர்மபுரி தொகுதி 
திரு.திருநாவுகரசு MP - ரூபாய் 1 கோடியே 20 லட்சம் திருச்சி தொகுதி 
திரு.ரவிக்குமார் MP - ரூபாய் 5 லட்சம் விழுப்புரம் 
திரு.நவாஸ் கனி MP - ரூபாய் 20 லட்சம் ராமநாதபுரம் 
திரு.பாரிவேந்தர் MP - ரூபாய் 1 கோடி பெரம்பலூர் தொகுதி 
திரு.AKP.சின்ராஜ் MP - ரூபாய் 1 கோடி நாமக்கல் தொகுதி 
திரு.எம்.செல்வராஜ் MP - ரூபாய் 60 லட்சம் நாகை தொகுதி 
மேலும் பலர் நிதி ஒதுக்கீடு செய்து தனது பங்களிப்பை அளித்துவருகிறார்கள்.

மேலும், திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கிய கொரோனா நிவாரண தொகையின் விவரம் :

திரு.மு.க.ஸ்டாலின் - 25,00,000 கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி
திரு.ஐ.பெரியசாமி - 25,00,000 ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி
திரு.அர. சக்கரபாணி - 25,00,000 ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி
திரு.ஐ.பி.செந்தில் குமார் - 25,00,000 பழனி சட்டமன்றத் தொகுதி
திரு.பொன்முடி - 25,00,000 திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதி
திரு.சி.வி.எம்.பி.எழிலரசன் - 10,00,000 காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி
திரு.டி.செங்குட்டுவன் - 40,00,000 கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி
திரு.எம்.ராமச்சந்திரன் - 25,00,000 ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி
திரு.துரை சந்திரசேகரன் - 25,00,000 திருவையாறு சட்டமன்றத் தொகுதி
திரு.இ.கருணாநிதி - 25,00,000 பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி
திரு.TKG.நீலமேகம் - 25,00,000 தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி
திரு.கோவி.செழியன் - 25,00,000 திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி
திரு.அ.செ.வில்வநாதன் - 25,00,000 ஆம்புர் சட்டமன்றத் தொகுதி
திரு.P.மூர்த்தி - 50,00,000 மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி
திரு.ப.ரங்கநாதன் - 25,00,000 வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி
திரு.M.A.ஆண்டி அம்பலம் - 25,00,000 நத்தம் சட்டமன்றத் தொகுதி
திரு.M.R.K.பன்னீர்செல்வம் - 25,00,000 குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி
திரு.கி.சரவணன் - 20,00,000 புவனகிரி சட்டமன்றத் தொகுதி
திரு.செந்தில்பாலாஜி - 3,94,800 அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி
திரு.அன்பில் மகேஷ்பொய்யாமொழி - 5,00,000 திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி
திரு.சபா.இராசேந்திரன் - 25,00,000 - நெய்வேலி சட்டமன்றத் தொகுதி
திரு.A.P.நந்தகுமார் - 25,00,000 அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி
திருமதி.வரலட்சுமி மதுசூதனன் - 25,00,000 செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி
திரு.மதிவாணன் - 25,00,000 கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி
திரு.சி.வெ.கணேசன் - 34,80,000 திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி
திரு.கு.பிச்சாண்டி - 25,00,000 கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி
திரு.மாசிலாமணி - 25,00,000 மயிலம் சட்டமன்றத் தொகுதி
திரு.தா.உதயசூரியன் - 25,00,000 சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி
திரு‌.எஸ்.ஆஸ்டின் - 15,00,000 கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி
திரு.தங்கம்தென்னரசு - 25,00,000 - திருச்சுழி சட்டமன்றத் தொகுதி
மேலும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பங்களிப்பை களத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

கோடிக்கணக்கான தொகையை கொரோனா நிவாரணத்திற்கு ஒதுக்கிய திமுக, அத்துடன் நிற்காமல் களப்பணியிலும் தனது தலைவர்களை இறக்கி இருக்கிறது. இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள் கொரோனா பாதித்தவர்களை தனிமை படுத்தும் சிறப்பு அரங்காக தனது கட்சிக்கு சொந்தமான கலைஞர் அரங்கை தாரளமாக அரசு பயன்படுத்தி கொள்ளலாம் என இன்று அறிவித்திருக்கிறார்.

என்றும் மக்கள் பணியை மட்டுமே கருத்தில் கொண்டு செய்யப்படும் திமுக மற்றும் அதன் தலைமையை அனேக தமிழக மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

Comments