கொரோனா வைரசுக்கு எதிரான போர்... வல்லரசு நாடுகளே திணறும் நிலையில் இந்திய ராணுவம் செய்த மாஸான காரியம்

கொரோனா வைரசுக்கு எதிரான போர்... வல்லரசு நாடுகளே திணறும் நிலையில் இந்திய ராணுவம் செய்த மாஸான காரியம்கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்திய ராணுவம் களமிறங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கண்ணுக்கே தெரியாத கோவிட்-19 வைரஸ் தற்போது ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டி படைத்து வருகிறது. கொரோனா வைரஸ் வகைகளில் ஒன்றான கோவிட்-19 வைரஸ், சீனாவில் இருந்து பரவ தொடங்கியதாக நம்பப்படுகிறது. சீனாவை தொடர்ந்து இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், இங்கிலாந்து, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட்-19 வைரஸால் உலகம் முழுவதும் தற்போது வரை 34 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7,23,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் தற்போது கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 1,071 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரை மஹாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கோவிட்-19 வைரஸ் நோயாளிகள் அதிக அளவில் உள்ளனர். கோவிட்-19 வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில் கோவிட்-19 வைரசுக்கு எதிரான போரில் தற்போது இந்திய ராணுவமும் களமிறங்கியுள்ளது. கோவிட்-19 நோயாளிகளுக்காக பேருந்து ஒன்றை இந்திய ராணுவம் மாடிபிகேஷன் செய்துள்ளது. கோவிட்-19 அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, இந்திய ராணுவம் இந்த பஸ்ஸை உருவாக்கியுள்ளது.

இந்திய ராணுவத்தின் வெஸ்டர்ன் கமாண்ட் (Western Command) இந்த பேருந்தை உருவாக்கியுள்ளது. இது குறித்து இந்திய ராணுவத்தின் பொது தகவலின் ஏடிஜி (Additional Directorate General) டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒரே ஒரு நுழைவு வாயில் மட்டும் கொண்டதாக இந்த பேருந்து மாடிபிகேஷன் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்காக வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. கோவிட்-19 வைரஸானது நோயாளிகளின் சுவாச மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே தற்போது உலகம் முழுவதும் வென்டிலேட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது.

Comments