கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு மலைகளைக் கடந்து 3 நாட்களாக நடந்தே வந்த உசிலம்பட்டி கூலி தொழிலாளர்கள்

கொரோனாவை கட்டுப்படுத்த லாக்டவுன் அமலாக்கப்பட்டதால் அன்றாட கூலி தொழிலாளர்களின் அடுத்த நாள் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியானது. பிற மாநிலங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு பெரும்பாடுபட்டு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
கேரளாவில் பணிபுரிந்த தமிழக தொழிலாளர்கள் மலைகளைக் கடந்து தமிழகத்துக்குள் வந்தனர். அப்படி வந்த போது மலையில் காட்டுத் தீயில் சிக்கி குழந்தை உட்பட இருவர் உயிரிழந்தனர். இதேபோல் ரயில் பாதைகளின் வழியே கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு பலர் திரும்பினர்.
இந்நிலையில் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் தோட்ட தொழிலாளர்களாக பணிபுரிந்த தமிழகத்தின் உசிலம்பட்டியை சேர்ந்த தொழிலாளர்கள் குழுவும் நடைபயணமாக வந்து சேர்ந்துள்ளனர். மலைப்பகுதிகளில் 130 கி.மீ. தொலைவை 3 நாட்கள் கடும் போராட்டங்களுக்கு இடையே கடந்து தமிழகம் திரும்பி உள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழக எல்லையான போடிமெட்டு சோதனை சாவடியை நேற்று வந்தடைந்தனர்.
Comments