
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருகிறது. இதுவரை 785777 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 37815 பேர் உயிரிழந்துள்ளனர் 165607 பேர் இறந்துள்ளனர். உலகிலேயே மிக அதிகபட்மாக அமெரிக்காவில் சுமார் 1.50 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே மிக அதிகபட்சமாக இத்தாலியில் மிக அதிகபட்சமாக இதுவரை சுமார் 11500 பேர் இறந்துள்ளார்கள்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 100க்கணக்கானாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பும் கணிசமாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1347 ஆக அதிகரித்துள்ளது. தெலுங்கானாவில் புதிதாக இறந்த 6 பேர், கேரளாவில் ஒருவர் உள்பட மொத்தம் நாடு முழுவதும் 44 பேர் இறந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 1166 பேர் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள் 138 பேர் இதுவரை பூரண குணம் அடைந்துள்ளனர். நாட்டிலேயே மிக அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர். 39 பேர் குணம் அடைந்துள்ளனர்.
2வது இடத்தில் கேரளா உள்ளது. இங்கு கொரோனாவால் 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் உயிரிழந்துள்ளார்கள். 20 பேர் குணமடைந்துள்ளனர். 213 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மூன்றாவது இடத்தில் டெல்லி உள்ளது. இங்கு 97 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2 பேர் இறந்துள்ளனர். 6 பேர் குணம் அடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் 96 பேரும், கர்நாடகாவில் 91 பேரும், ராஜஸ்தானில் 79 பேரும், தெலுங்கானாவில் 77 பேரும், குஜராத்தில் 70 பேரும், தமிழகத்தி 67 பேரும், ஜம்மு காஷ்மீரில் 49 பேரும், மத்திய பிரதேசத்தில் 47 பேரும் , பஞ்சாபில் 41 பேரும், ஹரியானாவில் 36 பேரும், ஆந்திராவில் 23 பேரும், மேற்கு வங்கத்தில் 22 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பீகாரில் 16 பேரும், சண்டிகரில் 13 பேரும், லடாக்கில் 13 பேரும் அந்தமானில் 10 பேரும் சட்டீஸ்கரில் 8 பேரும், உத்தரகாண்டில் 7 பேரும், கோவாவில் 5 பேரும், இமாச்சல பிரதேசத்தில் 3 பேரும், ஒடிசாவில் 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர், மிசோரம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Comments