
இதன்மூலம் தேனி ஆவின் தலைவராக வெற்றிபெற்றும் அந்த பதவியில் செயல்பட முடியாமல் தவித்து வருகிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா.
ஓ.ராஜாவுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை விதித்த தடையை நீக்கக்கோரி ஆவின் பொதுமேலாளர் மற்றும் இயக்குநர் தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்ட ஆவின் தலைவராக விதிகளை மீறி ஓ.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறி, பழனிசெட்டிபட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அமாவாசை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். தேனி ஆவினில் தலைவர், துணை தலைவர், மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுகவினரை மட்டும் நியமித்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து தேனி ஆவின் தலைவராக ஓ.ராஜா செயல்பட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இந்நிலையில் அந்த தடையை நீக்கக் கோரி ஆவின் பொதுமேலாளர் தரப்பில் இருந்து நீதிமன்றத்தை நாடிய போது, தடையை நீக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
ஆவின் மனுவை ஏற்று நீதிமன்றம் தன்னை தலைவராக செயல்பட அனுமதிக்கும் என எதிர்பார்த்திருந்த ஓ.பி,எஸ்.தம்பிக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை தடையை நீக்க மறுத்துவிட்டதால் கடும் அதிர்ச்சியில் உள்ளார் ஓ.ராஜா.
தேனி ஆவின் தலைவராக ஓ.ராஜா செயல்பட முடியாததால், அந்த மாவட்ட ஆவினில் ஏராளமான பணிகள் நிலுவையில் உள்ளன. மேலும், நிர்வாகரீதியாகவும் தேனி ஆவின் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Comments