
இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையிலான சண்டை வலுத்துள்ளது. இந்த சண்டை கண்டிப்பாக மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் என்று கூறுகிறார்கள்.
ஈரான் - அமெரிக்கா இடையில் நிலவும் இந்த சண்டைக்கு அணு ஆயுத ஒப்பந்தமும் காரணம் ஆகும். அமெரிக்காவுடன் ஈரான் 2015ல் அணு ஆயுத ஒப்பந்தம் செய்தது. அப்போது, ஈரான் அணு ஆயுதங்களை செய்ய கூடாது, சோதனை செய்ய கூடாது என்று ஒப்பந்தம் போடப்பட்டது. மற்ற சில நாடுகளுடனும் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆனால் 2018ல் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்தது. அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் மதிக்கவில்லை. அந்த நாட்டிடம் அணு ஆயுதங்கள் உள்ளது. மறைமுகமாக அணு ஆயுதங்களை ஈரான் உற்பத்தி செய்து வருகிறது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியாது. இதனால் அந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்தது.
அதோடு ஈரான் மீது தொடர்ச்சியாக மூன்று பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. இந்த நிலையில் அமெரிக்காவுடன் நிலவும் சண்டை காரணமாக ஈரான் மீண்டும் யுரேனியம் ஆராய்ச்சியில் குதித்துள்ளது. முன்பை விட இப்போது மீண்டும் யுரேனியத்தை அதிகமாக செறிவூட்டி ஆராய்ச்சி செய்து வருகிறோம். 2015ல் செய்ததை விட அதிகமாக ஆராய்ச்சி செய்கிறோம்.
இதை இன்னும் அதிகப்படுத்துவோம். அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக யுரேனியம் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. இதை எப்படி பயன்படுத்துவோம் என்று இப்போது சொல்ல முடியாது. ஆனால் எங்கள் பணிகள் தொடரும்.
எங்களுக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுக்கிறது. ஆனாலும் நாங்கள் இதை நிறுத்த போவது கிடையாது என்று ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி தெரிவித்துள்ளார். யுரேனியம் மூலம்தான் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படும். அதனால்தான் ஈரானின் இந்த அறிவிப்பு உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Comments