
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியை சேர்ந்த 21 உறுப்பினர்களும் திமுகவை சேர்ந்த 5 உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
இதில் அதிமுக கூட்டணி சார்பில் பாமகவின் வேட்பாளர் ரேவதியும் திமுக வேட்பாளர் நல்லம்மாளும் சேலம் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். மொத்தம் 29 வாக்குகளில் 26 வாக்குகள் பதிவாகியிருந்தன.
அதில் அதிமுக கூட்டணிக்கு 22 வாக்குகளும் திமுக வேட்பாளருக்கு 4 வாக்குகளும் கிடைத்தன. மொத்தம் உள்ள 5 வேட்பாளர்களில் 4 வேட்பாளர்கள் மட்டுமே நல்லம்மாளுக்கு வாக்களித்தனர்.
ஒருவர் மட்டும் மாற்றி அதிமுகவுக்கு அளித்துள்ளார். இதனால் மொத்தம் 22 வாக்குகள் அதிகம் பெற்ற ரேவதி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். திமுக வேட்பாளர் தெரியாமல் வாக்களித்தாரா இல்லை வேண்டுமென்றே வாக்களித்தாரா என தெரியவில்லை.
Comments