திருச்சி மாவட்ட உள்ளாட்சி திமுக வசம்.. மொத்தமாக அள்ளியது

In the rural local body election DMK is sweeping Trichy district திருச்சி: சமீபத்தில் முடிவடைந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டம் திமுக வசமாகியுள்ளது. திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் 14 ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி குழுவில் வெற்றி பெற்றவர்கள் திமுக மாவட்ட செயலாளர் கே என். நேருவை சந்தித்து, ஆசி பெற்றனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றிய குழு தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியது. இதன்படி ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்: 1. புள்ளம்பாடி-ரஷ்யா 2.மண்ணச்சநல்லூர்- ஸ்ரீதர் 3.தொட்டியம்- புனிதாராணி 4.தா.பேட்டை- சர்மிளா 5.மணப்பாறை- அமிர்தவள்ளி 6. மருங்காபுரி-பழனியாண்டி 7.மணிகண்டம்- கமலம் 8. திருவரம்பூர்-சத்யா 9.உப்பிலியாபுரம்- ஹேமலதா 10.அந்தநல்லூர்- துரைராஜ் 11.முசிறி- மலர் 12.வையம்பட்டி- குணசீலன் 13.லால்குடி- ரவிசந்திரன். 14 துறையூர்-சரண்யா.

மாவட்ட ஊராட்சி குழு தலைவராக திமுகவின் தர்மன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Comments