
தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் இரண்டு பதவிகளிலும் திமுக கூட்டணியை 50%+ இடங்களை வென்று சத்தான படைத்தது.
7 மாவட்டங்களின் திமுக சேர்மன் பதவிகளை கைப்பற்றுகிறது ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 5090 இடங்களில் திமுக 2273 , அதிமுக 2071, மற்றவை - 509 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.இன்னொரு பக்கம் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 515 இடங்களில் திமுக 263, அதிமுக 235, மற்றவை - 1 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ஆனால் திமுக இந்த வெற்றியை கொண்டாட முடியாத அளவிற்கு, காங்கிரஸ் கட்சி திமுகவுடன் வம்பிழுக்க தொடங்கி உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை.ஒன்றியத்திற்கு, மாவட்டத்திற்கு தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் திமுக எங்களுக்கு அப்படி எதுவும் செய்யவில்லை.
27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகூட வழங்கவில்லை. எங்களிடம் தருவதாக வாக்களித்த இடங்களை கூட திமுக எங்களுக்கு வழங்கவில்லை. மாவட்ட அளவில் பேசிமுடித்த எந்த ஒரு ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை. திமுகவின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக இருந்தது என்று கே.எஸ் அழகிரி குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் திமுக, காங்கிரஸ் கூட்டணி முறிந்துவிட்டது என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இரண்டு கட்சிகளுக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடு வெளிப்படையாக வெளியே தெரிய வந்துள்ளது. கூட்டணி மொத்தமாக உடைய இதனால் வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் வட்டாரத்தில் நிறைய செய்திகள் வந்தது.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி இதை மறுத்துள்ளார். இந்த செய்திகள் குறித்து அவர் அளித்த விளக்கத்தில், திமுகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லை.எப்போதும் போல திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கவில்லை என்பது எங்களுக்கு வருத்தமாக இருந்தது.
அதை மட்டும் கூறினோம். சில விஷயங்களை சொல்ல வேண்டி இருந்தது, அதை சொன்னோம். நேற்று அறிக்கையில் கூறியது, நேற்றோடு முடிந்துவிட்டது. திமுகவுடன் எந்த சண்டையும், மோதலும் இல்லை. இதை சிலர் பெரிதுபடுத்துவிட்டனர், என்று கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
Comments