3,000 ஈழத் தமிழர் திருப்பி அனுப்பப்படுகின்றனர்

3,000 ஈழத் தமிழர் திருப்பி அனுப்பப்படுகின்றனர்இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஸ் குணவர்த்தன 2 நாட்கள் பயணமாக நேற்று இந்தியா வருகை தந்தார். அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். அப்போது, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுதலை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் 3,000 ஈழத் தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என தினேஸ் குணவர்த்தன கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Comments