வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு.. தொடர்ந்து 3 நாட்கள் வங்கி பணிகள் பாதிக்கும் அபாயம்

bank staff unions announced two day strike between January 31 and February 1 டெல்லி: ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் வரும் 31ம் தேதி மற்றும் 1ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்கள் சங்கம் தங்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதை ஏற்க இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மறுத்துவிட்டது.அத்துடன் 12.25 சதவீத உயர்வு மட்டுமே வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கடந்த 13ம் தேதி வங்கி ஊழியர்கள் மற்றும் நிர்வாகங்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து வரும் 31ம் தேதி மற்றும் பிப்ரவரி 1ம் தேதி வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

31ம் தேதி வெள்ளிக்கிழமையும், 1ம் தேதி சனிக்கிழமையும், 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம் போல் விடுமுறையாகும். எனவே வங்கி ஊழியர்கள் சங்கத்தினரின் வேலை நிறுத்தத்தால் 3 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

அத்துடன் மாத கடைசி மற்றும் முதல் தேதிகள் என்பதால் சம்பளம் வழங்கும் பணிகள் கூட பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் ஏராளமான மக்களை நேரடியாக பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம்.

இதனிடையே கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஏப்ரல் 1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்ததில் ஈடுபடபோவதாகவும் வங்கி ஊழியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

Comments