
சென்னை: தர்பார் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூலுக்குக் குறைச்சல் இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் படம் பார்த்த பலரும் என்னப்பா இது இப்படி ரஜினியை போட்டு வேஸ்ட் பண்ணிருக்காங்க என்று புலம்பிக் கொண்டுள்ளனராம். நம்முடைய வாசகர் ஒருவரும் படம் பார்த்த பின்னர் தனக்கு ஏற்பட்ட உணர்வுகளை கமெண்ட் பகுதியில் கொட்டியிருந்தார். பெரியசாமி என்ற அந்த வாசகரின் கருத்து இதோ... நேற்று 2000 ரூபாய் செலவழித்து குடும்பத்துடன் படம் பார்த்தபின் வந்த கடுப்பினால் எழுதுகிறேன். மும்பை போலீஸ் கமிசனர் எப்போதிருந்து டெல்லி அரசாங்கம் அப்பாய்ண்ட் பண்ண ஆரம்பிச்சிச்சு?? ஒரு வேலை மும்பையை டெல்லி போல் யூனியன் பிரதேசமாக மாத்திட்டாங்களோன்னு டவுட் வந்திருச்சு. நிவேதா சின்ன தம்பி பிரபு போல் சின்ன தங்கச்சி. தான் கல்யாணம் செய்துவிட்டால் அப்பா தனியாக இருப்பார் என அப்பாவை கல்யாணம் செய்து கொள்ள செட்டப் செய்கிறார். அது சரி, தன் கூட இருங்கள் என சொல்லி விட்டால் நயனுக்கு என்ன வேலை என நினைத்திருப்பார் போலும். ஒரே இரவில் 2000 க்கும் மேற்பட்ட பெண்களை விபச்சாரத்தில் இருந்து பறந்து பறந்து காப்பாற்றுவது என்பது ரஜினிபிகேஷன். வில்லனை கைது செய்ய துபாய், இந்தோனேசியா, அண்டார்டிகா போலீஸ் கமிசசனர்கள் எல்லாம் வடிவேலு பாணியில் " இந்த ஆபரேஷனில் எங்க பங்கும் இருக்கணும்" என வீடியோ போட்டு கேட்பது எல்லாம் சற்றே ஓவர். ஹியூமன் கமிஷன் ரஜினியை mentally unfit என சொன்னதற்காக தண்டால், பஸ்கி எல்லாம் எடுத்து 6 பேக் வரை செல்வது நல்லாவே இல்லை. ஒரு டிவி சேனலை ஓட விட்டு கதையின் பல பகுதியை சொல்லி விடுகிறார்கள். மொத்தத்தில் ரஜினி இருக்கிறார், அதனால் கதை திரைக்கதை எப்படி இருந்தாலும் ஓடும் என இயக்குனர் நினைக்கிறார் என்று கூறியுள்ளார் பெரியசாமி.
Comments