
அந்நாட்டிற்கு தானே பிரதமர் என்று கூறிய அவர் புதிய கொடி, புதிய பாஸ்போர்டையும் அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால் நித்தி ஈகுவடார் நாட்டில் இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்தது.
இந்த நிலையில் அவ்வப்போது ஒரு வீடியோவை வெளியிடும் நித்தியானந்தா தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் என்னை யாராலும் தொடவும் முடியாது. அழிக்க முடியாது.
எந்த சட்டமும் என்னை ஒன்றும் செய்யாது. நான் உங்களிடம் உண்மையை சொல்கிறேன். நான்தான் பரமசிவன். சீடர்கள் என்னுடன் இருப்பதால் நீங்கள் உங்களுடைய நேர்மை, விசுவாசத்தை என்னிடம் காண்பித்தீர்கள். உங்களுக்கு மரணமே இல்லை என பேசியுள்ளார்.
கடந்த 2010-ஆம் ஆண்டு பெங்களூருவில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்த வழக்கில் இமாச்சல பிரதேசத்தில் வைத்து நித்யானந்தாவை போலீசார் கைது செய்தனர். இதனால் அவர் அங்கு பதுங்கிக் கொண்டு வீடியோவை வெளியிட்டு வருவதாக போலீசார் கருதுகிறார்கள்.
Comments