வார்டு மறுவரையறை இல்லாமல் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கக் கூடாது.. சுப்ரீம் கோர்ட்டில் திமுக வழக்கு

DMK files petition in Supreme Court not to announce election dates for Civic polls டெல்லி: வார்டு மறுவரையறை இல்லாமல் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கக் கூடாது என கோரி சுப்ரீம் கோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் இந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மட்டும் இந்த தேர்தல் நடத்தப்படுகிறது.

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கு பல்வேறி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் திமுக மனுதாக்கல் செய்துள்ளது. அதில் தொகுதி மறுவரையறை பணிகள் நிறைவடைந்த பின்னர் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். அதனால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கெனவே திமுத தொடர்ந்த வழக்கு, உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மனுக்கள் நாளை விசாரணைக்கு வரும் நிலையில் இந்த மனுவும் நாளை விசாரிக்கப்படவுள்ளது.

Comments