
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, என்ன நடந்தாலும் எங்கள் மாநிலத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை அனுமதிக்க மாட்டோம். என்ஆர்சி சட்டத்தையும் எங்கள் மாநிலத்தில் அனுமதிக்க மட்டோம். வடகிழக்கு மாநிலங்களுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம்.
காவி கட்சி நினைத்ததை எல்லாம் செய்ய முடியாது. அவர்களால் எங்கள் மாநிலத்தை துண்டு போட முடியாது. அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கு மாநில நலன்தான் முக்கியம். பாராளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேறி இருக்கலாம்.
ஆனால் எங்கள் மாநிலத்திற்கு இதை அனுமதிக்க மாட்டோம். மேற்கு வங்கத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். எங்கள் நாட்டில் மக்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பார்கள். அதற்கு நான் உறுதி அளிக்கிறேன்.
இந்த சட்டத்திற்கு எதிராக திரிணாமுல் கட்சி போராட்டம் நடத்தும். வரும் 16-18 தேதிகளில் மாநிலம் முழுக்க நாங்கள் போராட்டம் நடத்துவோம். இன்னும் எத்தனை நாளைக்கு நீங்கள் இப்படி மக்களை பிரித்து மோசமாக ஆட்சி நடத்துவீர்கள், என்று மமதா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
Comments