தனியாக சிக்கிக் கொண்ட போலீஸ்காரர்.. சூழ்ந்த போராட்டக்காரர்கள்.. லத்தியை பிடுங்கி அடி.. ஷாக் வீடியோ

Delhi, visuals of protesters targeting policemen டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் இன்று நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸ்காரர் ஒருவர் விரட்டி விரட்டி தாக்கப்படும் காட்சி வெளியாகியுள்ளது. டெல்லியின் சீலாம்பூர் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடிய டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் சமீபத்தில் போலீசாரால் தடியடிக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில், மக்கள் குடியிருப்பு பகுதியான சீலாம்பூரில் இன்று போராட்டம் வெடித்தது. போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். எனவே, கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தங்களிடம் தனியாக சிக்கிக் கொண்ட போலீஸ்காரர் ஒருவரை விரட்டி செல்லும் போராட்டக்காரர்கள், அவரை லத்தியை பிடுங்கி பின்பக்கம் அடிக்கிறார்கள். ஒருவர் ஓடி வந்து அவரை பின்னால் இருந்து தலையில் அடித்து தள்ளிவிடுகிறார்.

அந்த போலீஸ்காரர் வயதில் மூத்தவர் போல தெரிகிறது. எனவே அதிகம் ஓட முயற்சி செய்யாமல், அங்கேயே நின்றபடி, இருப்பதால், போராட்டக்காரர்களுக்கு அது வசதியாகிவிட்டது. சமீபத்தில், டெல்லியில் வக்கீல்கள் போராட்டத்தின்போதும் போலீசாரை அவர்கள் சூழ்ந்து சரமாரியாக தாக்கினர். இப்போது இந்த போராட்டத்தின்போதும் போலீசார் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Comments