உள்ளாட்சித் தேர்தலில் ம.நீ.மய்யம் போட்டியிடாது: கமல்ஹாசன்

Makkal Needhi Maiam to boycott local body Elections, says Kamal Haasan சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என்று அதன் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. தற்போதைய உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக உச்சநீதிமன்றத்தில் நாளை மனு தாக்க்ல் செய்ய உள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் ரஜினிகாந்த் பெயரையோ படத்தையோ ரசிகர் மன்ற கொடியையோ பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என அதன் தலைவரான நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இதுத தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்தப் பாத்திரமும் வேண்டாம். 2021-ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே நோக்கம் என தெரிவித்துள்ளார்.

மேலும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பங்கீடு மிகக் குறைவாக இருக்கும், உள்ளாட்சித் தேர்தல் முழுமையாக மக்களின் தேர்வாக இருக்கப் போவதில்லை எனவும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Comments