என்.ஆர்.பி., என்.ஆர்.சி. எல்லாமே ஏழைகள் மீதான வரிச்சுமைதான்: ராகுல் பொளேர் அட்டாக்

NRC-NPR Tax On Poor People, says Rahul Gandhi ராய்ப்பூர்: மத்திய அரசின் என்.ஆர்.பி, என்.ஆர்.சி. அனைத்துமே ஏழைகள் மீதான வரிச்சுமைதான் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

சத்தீஸ்கரில் பழங்குடியினரின் தேசிய திருவிழாவில் ராகுல் காந்தி இன்று பங்கேற்றார். தொடக்கத்தில் பழங்குடியினருடன் இணைந்து இசைக்கருவிகளை வாசித்தபடியே ராகுல் காந்தி நடனமாடினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது ஏழைகள் மீது சுமத்தப்பட்ட வரிச்சுமைதான். அதே போலவே என்.ஆர்.பி, என்.ஆர்.சியும் வரிச்சுமைகள்தான்.

ஏழைகளால் ஆவணங்களை முறையாக தர இயலாது. அதனால் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர். ஏழைகளின் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக அதிகாரிகளுக்கு போக போகிறது. அப்படியே லஞ்சம் கொடுத்தாலும் பெயர்களை சரியாக எழுதவும் மாட்டார்கள்.

இதுதான் யதார்த்தம். இப்போது மத்திய அரசைப் பார்த்து எங்களுக்கான வேலைவாய்ப்பு எங்கே என கேள்வி எழுப்புகின்றனர் மக்கள். ஒருகாலத்தில் இந்தியாவும் சீனாவும் பொருளாதாரத்தில் சமநிலையில் போட்டி போட்டன.

இப்போது இந்தியாவில் வன்முறைகள் அதிகரித்துட்டன; வீதிகளில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை உள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Comments