
தான் அதிகமாக வெங்காயத்தை சாப்பிட மாட்டேன் என நிர்மலா கூறியதற்கு எதிர்க்கட்சியை சேர்ந்த எம்பி ஒருவர், வெங்காயத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் எரிச்சலை உண்டுபண்ணும் என கூறினார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
வெங்காயத்தின் விலை உயர்வு குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் இடைத்தரகர்கள் அல்லாமல் நேரடி விற்பனை திட்டத்தின் மூலம் வெங்காயம் கிடைக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக வெங்காய விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. பெரிய வெங்காயத்தின் விலை 150 முதல் 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலையும் 130 முதல் 200 வரை விற்பனையாகிறது.
இதனால் நடுத்தர மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். உணவு பொருட்களின் விலைகளையும் ஹோட்டல் நிர்வாகம் உயர்த்தி விட்டது. பொங்கல் பண்டிகை வரை இதே நிலை நீடிக்கலாம் என விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
Comments