
டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழகம், ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பல இடங்களில் இன்றும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடு அருகே மகளிர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
டெல்லி ஜம்மா மசூதியில் தொழுகை முடிந்த பின்னர் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்துக்கு பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத் தலைமை வகித்தார்.
டெல்லி ஜம்மா மசூதி பகுதியில் போர்ராட்டம் தொடர்கிறது. இதேபோல் டெல்லியில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அப்போது தார்யகஞ்ச் பகுதியில் கார் ஒன்றுக்கு திடீரென தீ வைக்கப்பட்டது.
டெல்லி கன்னாகட் பகுதியில் மத்திய பூங்காவிலும் நூற்றுக்கணக்கானோர் திரண்டு நின்று போராடி வருகின்றனர். இதனால் டெல்லியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள், கண்ணீர்புகை குண்டுகள் சகிதம் தயாராக உள்ளனர்.
Comments