
மேகாலயா மற்றும் அருணாசலப் பிரதேசத்துக்கு ஞாயிற்று மற்றும் திங்கள்கிழமை உள்துறை அமைச்சர் அமித்ஷா பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். தற்போது வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனால் அமித்ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எதற்காக அமித்ஷாவின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் ஜப்பான் பிரதமர் அபேவின் இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சரின் பயணம் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments