
ஊரக பகுதிகளில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் நடவடிக்கை தந்திரம் நிறைந்த சூழ்ச்சி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தேர்தலை தள்ளிப்போட நீதிமன்றத்துக்கு தரும் வாய்ப்பாக பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையர் தனித்து செயல்படவில்லை என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய வகையில் அவர் செயல்பட்டிருப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு குழப்பங்கள் நிறைந்ததாகவும், குளறுபடியாக உள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், அறிவிப்பை திரும்பப்பெற்று அனைத்து குறைபாடுகளையும் களைந்து முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊரகப்பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவித்திருப்பது இதுவரை இல்லாத புதுமை என்றும், ஜனநாயக விரோத போக்கிற்கு வழிவகுத்துக் கொடுக்கும் வகையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், தனது கண்டனத்தை பதிவு செய்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
Comments