அடி வாங்கியது அதிமுகதான்: ஸ்டாலின் பதிலடி

dmk, dmkchiefstalin, m.k.stalin, supreme court, high court, localbodyelection, திமுக, உள்ளாட்சிதேர்தல், அமைச்சர்சண்முகம், திமுகதலைவர்ஸ்டாலின், தளபதிஸ்டாலின், மு.க.ஸ்டாலின்,  தி.மு.க., தி.மு.க., தலைவர் ஸ்டாலின், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்,சென்னை: உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் திமுக மரண அடி வாங்கியதாக அமைச்சர் சண்முகம் கூறியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் மரண அடி வாங்கியது அதிமுக தான். ஜனநாயகம் காக்கும் திமுகவின் பணியை உச்சநீதிமன்றம் பாராட்டியுள்ளது. ஜனநாயக தேர்தல் களத்தில் மக்களை சந்திக்க திமுக தவறியதுமில்லை. தயங்கியதுமில்லை. அவசர கோலத்தில் தேர்தலை நடத்த துடிக்கும் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். வெற்றி தோல்வியை கடந்து தேர்தலை நாடி எதிர்கொள்ளும் உண்மையான ஜனநாயக இயக்கம் திமுக தான். உரிய நேரத்தில், தேர்தல் நடத்தி உள்ளாட்சி அமைப்புகளுக்க வலிமை சேர்த்ததும் திமுக தான். உள்ளாட்சியில் நம் ஆட்சியை அமைத்திடும் போது, விரைவில் தமிழகத்தில் நல்லாட்சி அமைய போகிறது என மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Comments