
உச்சக்கட்டமாக, மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சியை இழந்தது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைத்துள்ளது. சமீபத்தில், சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பாரதிய ஜனதா கட்சியே ஆட்சியில் இருந்துவந்தது. அங்கு, ஐந்து கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த மாநிலத்தில் , தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள், பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை இழக்கும் என்று கூறுகின்றன.
காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முன்னணி கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று தேர்தல் கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. மொத்தமுள்ள 81 இடங்களில், இந்தக் கூட்டணி 50 இடங்கள் வரை கைப்பற்றும் என்று 'இந்தியாடுடே' மற்றும் 'மேக்ஸிஸ்' கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. பா.ஜ.க கூட்டணிக்கு 32 சீட்டுகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாம்.
ஜார்க்கண்டில் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்புள்ளது என்று சி -வோட்டர்ஸ் கணித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு 32 சீட்டுகளும் காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு 35 சீட்டுகளும் கிடைக்கும் என சி -வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு சொல்கிறது.
Comments