
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் டெல்லியில் சீலாம்பூர், ஜாப்ராபாத்திலும் போராட்டம் நடைபெற்றது.
அப்போது மக்கள் சாலைகளில் கூடிய அமைதி பேரணி நடத்திதால் பதற்றம் ஏற்பட்டது. அவர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசினர். இதனால் அப்பகுதியில் இருந்தவர்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் போலீஸார் மீது செங்கற்களை.
இதனால் சாலை முழுவதும் உடைந்த செங்கற்கள் காணப்பட்டது. ஜாமியா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட வன்முறையால் பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் தீ வைக்கப்பட்டதால் தலைநகர் டெல்லியில் பதற்றம் நிலவி வருகிறது.
பேரணி அமைதியாக நடந்த போதிலும் அவர்களை கலைக்க போலீஸ் முற்பட்டதே வன்முறைக்கு காரணம் என கூறப்படுகிறது.
Comments