என்னங்க நியாயம் இது.. ஊராட்சி தலைவர் ஏலத்தை தட்டிக்கேட்ட சதீஷ்குமார்.. வெட்டி சாய்த்த 7 பேர்!

விருப்ப மனு விருதுநகர்: ஊராட்சி தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பதுதான் பிரச்சனை.. இது தகராறாக உருவெடுத்து.. கடைசியில் கொலை வரை முடிந்துள்ளது.. பேங்க் மேனேஜர் ஒருவர் மிக கொடூரமாக அடித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் விருதுநகரில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் தந்துள்ளது.
சாத்தூர் அருகே உள்ளது கோட்டைப்பட்டி ஊராட்சி. இங்கு 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

வர போகும் உள்ளாட்சி தேர்தலில் இந்த கோட்டைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பது குறித்து குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.

இதில், இந்த ஊரை சேர்ந்த ராமசுப்பு என்பவர் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.. இவர் அதிமுக கிளைச் செயலர் ஆவார்.. அதேபோல, காங்கிரஸ் கட்சி பிரமுகர் சுப்புராம் என்பவரும் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால், குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த கூட்டம் இது என்றாலும், ராமசுப்பு அனைவருக்குமே அழைப்பு விடுக்கவில்லை என்றும், தனக்கு வேண்டியவர்களை மட்டும் வைத்து இந்த கூட்டத்தை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இதில், இந்த ஊரை சேர்ந்த ராமசுப்பு என்பவர் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.. இவர் அதிமுக கிளைச் செயலர் ஆவார்.. அதேபோல, காங்கிரஸ் கட்சி பிரமுகர் சுப்புராம் என்பவரும் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால், குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த கூட்டம் இது என்றாலும், ராமசுப்பு அனைவருக்குமே அழைப்பு விடுக்கவில்லை என்றும், தனக்கு வேண்டியவர்களை மட்டும் வைத்து இந்த கூட்டத்தை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

கூட்டத்தினரிடையே சதீஷ்குமார் பேசும்போது, "மத்தவங்க எல்லாம் எங்கே? இப்படிப்பட்ட கூட்டத்திற்கு சமுதாயத்தில் உள்ள எல்லாரையும்தானே கூப்பிட வேண்டும்.. என் அண்ணன் சுப்புராமும் இந்த தேர்தலில் போட்டியிடறார்.. விருப்ப மனு அளித்துள்ளார்.. அதையுடம் பரிசீலனை செய்ய வேண்டும்" என்றார்.

சதீஷ்குமார் இப்படி பேசியதும் கூட்டத்தில் ஒருசிலர் ஆத்திரம் அடைந்து, அவரை சரமாரியாக தாக்கினர். இதில் சதீஷ்குமாருக்கு தலையில் பலமான அடிபட்டு, ரத்தம் கொட்டியது.. மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால் சதீஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். தகவலறிந்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு விசாரணையை ஆரம்பித்தனர்.

கோட்டைபட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் ராமசுப்பு, கணேசன், முத்துராஜ், சுப்புராம், ராம்குமார், சுப்புராஜ், செல்வராஜ் என 7 பேரையும் கைது செய்தனர். அநியாயமாக கொலை செய்யப்பட்ட சதீஷ்குமார், எம்ஏ படித்துவிட்டு, சிவகாசியில் ஒரு வங்கியில் மேனேஜராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது குடும்பம் மிக வறுமையின் பிடியில் உள்ள நிலையில், உடல்நலம் குன்றிய தந்தை, தம்பியின் படிப்பு, குடும்ப செலவு என அத்தனையையும் சதீஷ்குமார்தான் கவனித்து வந்துள்ளார். சதீஷ்குமாரின் உடலை கட்டிப்பிடித்து குடும்பத்தினர் கதறியது காண்போரை கலங்க செய்தது.

இளைஞர் அடித்துக்கொல்லப்பட்டதால், கோட்டைப்பட்டி கிராமம் பதற்றத்தில் உள்ளது.. பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்! கடலூர், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டதாக ஏற்கனவே புகார்கள் எழுந்தன.. இந்த நிலையில் விருதுநகரிலும், இப்படி மோதல் நடந்து கொலை வரை சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments