பிரசவத்துக்காக. 6 கி.மீ தொட்டில் பயணம்; கொட்டும் மழையில் தவித்துப்போன கர்ப்பிணி; நம்ம தமிழகத்தில் தாங்க - வீடியோ இணைப்பு

துடித்த கர்ப்பிணி ஈரோடு: சரியான சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்ணை ஆறு கிலோமீட்டர் தூரம் துணியில் தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை கிராமத்தில் நடந்துள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அமைந்துள்ளது பர்கூர் ஊராட்சி. இந்த பகுதியில் ஏராளமான மலை கிராமங்கள் அமைந்துள்ளன. அவை அனைத்தும் அடர்ந்த மலையில் அமைந்துள்ளதால் போதிய சாலை வசதிகள் இல்லை. இங்குள்ள மக்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டால் தொட்டில் கட்டி தான் பல கிலோமீட்டர் தூக்கிச்செல்கிறார்கள்.

இந்நிலையில் பர்கூர் மலையில் உள்ள சுண்டைப்போடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு 23 வயதாகிறது. குமாரிக்கு நேற்று காலை பிரசவ வலியால் துடித்துள்ளார். அங்கிருந்து மருத்துவமனைக்கு அவரை அழைத்துச்செல்ல பேருந்துகளோ, வாகன வசதியோ இல்லை. ஏன் சாலை வசதியும் சரிவர இல்லை.

இதனால் அந்த மக்கள் சற்று தாமதிக்காமல் துணியை மூங்கில் கம்பில் கட்டி தொட்டியாக மாற்றி அவரை உள்ளே படுக்க வைத்து தூக்கிச் செல்ல ஆரம்பித்தனர். இப்படியே கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்திருக்கிறார்கள்.

அதன்பிறகு அங்கு எதிரே வந்த ஒருவேனை நிறுத்தி ஏற்றிக்கொண்டு அவரை மருத்துமனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள். ஆனால் வழி அதிகமாகி வண்டியிலோ அவருக்கு பிரசவம் ஆனது. என்னாகுமோ ஏதாகுமோ என்று பதற்றத்துடன் உறவினர்கள் இருந்த நிலையில் குமாரிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது.

பிறகு குழந்தையுடன் அதே வண்டியல் மருத்துவனைக்கு சென்ற சிகிச்சைக்காக மருத்துமனைக்கு சென்றுள்ளார்கள். தற்போது தாயும் சேயும் நலமுடன் இருக்கிறார்கள்.

முன்னனதாக பழங்குடியினரின் பர்கூர் பகுதியில் ஒசூர் என்ற இடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. ஆனால் அங்கு போதிய வசதிகள்இல்லை என்று மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதனால் அவர்களின் ஊரில் இருந்து மருத்துவ சேவைக்கு 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாமரைக்கரை அரசு மருத்துவமனைக்குத்தான் அவர்கள் வர வேண்டி உள்ளதாகவும் சொல்கிறார்கள். இது அரசின் கவனத்திற்கு சென்றால் சிறப்பாக இருக்கும் அந்த பகுதி பழங்குடியினர் தெரிவித்தனர்.

Comments