டிசம்பர் 6 முதல் அனைத்து "ஜியோ கட்டணமும் உயர்வு": எவ்வளவு தெரியுமா?

கட்டண உயர்வு குறித்து அறிக்கைபுதிய தொலைத்தொடர்பு கொள்கை 1999-ன்படி, ஒவ்வொரு தொலைத் தொடர்பு நிறுவனங்களும், ஏ.ஜி.ஆர்., எனப்படும் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஆண்டு உரிம கட்டணம் உள்ளிட்டவைகளை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும்.

நிலுவையில் இருந்த தொகை பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிற தொலைதொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய உரிம கட்டணமான ரூ.92 ஆயிரம் கோடி மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணமான ரூ. 41 ஆயிரம் கோடி என மொத்தம் 1.33 லட்சம் கோடி நிலுவையில் இருந்தது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அக்டோபர் 24 ம் தேதி தொலைதொடர்பு நிறுவனங்கள் ரூ. 92 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ஏர்டெல் நிறுவனம் சுமார் ரூ.21 ஆயிரம் கோடி, வோடபோன் ஐடியா நிறுவனம் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சுமார், ரூ.16 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும். அதோடு, பி.எஸ்.என்.எல் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி, எம்.டி.என்.எல் சுமார் ரூ.2 ஆயிரம் கோடியும் பாக்கி வைத்திருக்கிறது.

இதில் வோடபோன், ஐடியா வரலாறு காணாத கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்தது. அதேபோல் ஏர்டெல் நிறுவனமும் உச்சநீதிமன்ற தீர்ப்பால் நிறுவனம் நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்தது. மேலும் ஜியோ நிறுவனமும் தங்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையிலும் முதலீடுகளை தக்க வைக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்தது. இதை சரிகட்டும் வகையில் வாடிக்கையாளர்களுக்கான கட்டண சேவையை உயர்த்தப்போவதாக நிறுவனம் அறிவித்திருந்தது.

இதையடுத்து ஜியோ நிறுவனத்திற்கான கட்டண உயர்வு குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் ஆல் இன் ஒன் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு 40 சதவீதம் வரை விலை அதிகரித்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், முதலீடுகளை தக்கவைக்கும் வகையிலும் கட்டணங்களை பொருத்தமான வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நுகர்வோரின் நலனுக்காக உறுதியுடன் இருக்கிறோம் எனவும் ​​இந்திய தொலைத் தொடர்புத் துறையைத் தக்கவைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஜியோ எடுக்கும் என்றும் நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எடுத்துக்காட்டாக ரூ.149-க்கு ரீசார்ஜ் செய்யும் திட்டத்திற்கு 300 நிமிடங்கள் ஜியோ அல்லாத அழைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 28 நாளாக இருந்த வேலிடிட்டி 24 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும்.

மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் ஜியோவின் லாபம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அக்டோபரில் ஜியோவின் லாபம் ரூ.990 கோடி என்று தெரிவிக்கப்படுகிறது. இது கடந்தமுறை லாபம் 681 கோடி என்பதைவிட 45 சதவீதம் அதிகமாக லாபம் ஈட்டியுள்ளது. அதேபோல் 331.3 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட ஜியோ, தற்போது 355.2 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. ஜியோ நிறுவனத்தின் இந்த புதிய டேரிஃப்கள் வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

Comments