மிசாவை நினைவில் கொண்டுவரும் கொடூரம்: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வலுக்கும் போராட்டம் : மங்களூருவில் 30 செய்தியாளர்கள் சிறைபிடிப்பு
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற 30-க்கும் மேற்பட்ட செய்தியாளர்களை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இதில் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த செய்தியாளர்களும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக, அம்மாநில தலைமை செயலாளருடன், பேச தலைமை செயலாளரிடம் அறிவுறுத்தி உள்ளதாக, கேரள வருவாய்துறை சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இதனிடையே உரிய அடையாள அட்டை இல்லாமல் செய்தி சேகரித்தவர்களை தான் சிறைபிடித்ததாக, மங்களூரு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
Comments