
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக அசாமில், போராட்டம் நடந்து வருகிறது. இதனையடுத்து, அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது. முன்னர், 24 மணி நேரம் துண்டிக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்டம் காரணமாக 48 மணி நேரமானது. பல இடங்களில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் போலீசார், ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், கவுகாத்தியில் தடையை மீறி போராட்டம் நடந்தது. அப்போது, நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
Comments