
அந்த வீடுகள் எல்லாமே ஓட்டு வீடுகள்தான்.. கருங்கல் சுவர் விழுந்ததுமே அந்த வீடுகள் நொறுங்கி விழுந்தன. அதனால் உள்ளே தூங்கி கொண்டிருந்தவர்கள் உடல் நசுங்கினர்.. அப்படியே வீடுகளுக்குள்ளேயே புதைந்தும் உயிரிழந்தனர். 4 வீடுகளுமே மண்ணோடு மண்ணாக புதைந்துவிட்டது.
விடிகாலை நேரத்தில், கனத்த மழை பெய்யும்போது இப்படி ஒரு சம்பவம் நடந்தது அங்கிருந்தவர்களுக்குகூட தெரியவில்லை. விடிந்தபிறகுதான் அக்கம்பக்கத்தினர் கண்டு அதிர்ந்துபோயினர்.. மீட்பு பணிகள் ஆரம்பமானது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளர்கள். சிறுவர், சிறுமியர், 10 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர். இதில், ஆனந்த்குமார், நதியா, அக்ஷயா, லோகுராம் ஆகிய 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி எடுத்தது.. தகவலறிந்து கலெக்டர் அங்கு வந்ததுமே பொதுமக்கள் அவரை சூழ்ந்து கொண்டு, காம்பவுண்ட் சுவர் அமைந்துள்ள வீட்டின் ஓனர் சிவசுப்பிரமணியத்தை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது சம்பந்தமாக பொதுமக்கள் போராட்டமும் நடத்தினர்.
இது சம்பந்தமாக சீமான், முக ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வேண்டுகோள் வைத்து வரும்நிலையில், சம்பந்தப்பட்ட வீட்டின் சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார். தனிப்படை போலீசார் சிவசுப்பிரமணியத்தை கைது செய்ததுடன், விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
Comments