
நடிகர் ராதாரவி, நயன்தாராவை பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசினார். அவரின் இந்த பேச்சு பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக திரைத்துறையினர் பலரும், சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலினிடம் இது தொடர்பாக புகார்கள் வைக்கப்பட்டது. இதையடுத்து திமுகவில் அப்போது அதிரடியாக ராதாரவி நீக்கப்பட்டார். ஆனால் அவர் தற்காலிக நீக்கம் என்றுதான் கூறப்பட்டது. ஆனால் திமுகவில் இருந்து மொத்தமாக ராதாரவி அப்போதே தன்னை விலக்கிக் கொண்டார்.
இதையடுத்து திமுகவில் இருந்து வெளியேறிய அவர் சில வாரங்களில் அதிமுகவில் இணைந்தார். அதிமுக கட்சியில் தனக்கு மரியாதை உள்ளது என்று கூறி அவர் அதிமுகவில் இணைந்தார். தற்போது புதிய திருப்பமாக நடிகர் ராதாரவி அதிமுக கட்சியில் இருந்து விலகி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
இன்று காலை சென்னை வந்த பாஜக தேசிய செயல் தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் பிரதமர் மோடியின் தலைமையை கண்டு ஈர்ப்பு அடைந்ததாகவும். அவருக்கு கீழ் தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த செயல்படுவேன் என்றும் ராதாரவி தெரிவித்துள்ளார்.
Comments