விரைவில் உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் இ.பி.எஸ்.

தென்காசி,உள்ளாட்சி தேர்தல், முதல்வர், இ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி,
தென்காசி: தென்காசி மாவட்ட துவக்க விழாவில் முதல்வர் இ.பி.எஸ்., பேசுகையில், தென்காசி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம். தென்காசி மக்களின் 33 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நெல்லையை பிரித்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. யார் முட்டுக்கட்டை போட்டாலும், உள்ளாட்சி தேர்தல் நடந்தே தீரும். ஏற்கனவே வரையறுக்கப்பட்ட வார்டுகள் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும். செண்பகவள்ளி அணைக்கட்டு பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்படும். 2018 - 19 நிதியாண்டில் மராமத்து பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Comments