தமிழகத்தில் வெற்றிடம் இல்லை.. அதிமுக, திமுகவுக்கு கருத்து கூறவிரும்பவில்லை.. ரஜினி

Rajinikanth says he is not willing to comment on ADMK, DMK about vaccum சென்னை: தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என அதிமுக, திமுக கூறியுள்ளதற்கு கருத்து ஏதும் கூற விரும்பவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த வெள்ளிக்கிழமை இயக்குநர் சிகரம் கே பாலசந்தரின் சிலை திறப்பு விழாவுக்கு சென்றுவிட்டு போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில் தமிழகத்தில் ஆளுமையான திறமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என்றார். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில் தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்றார். அது போல் தமிழக அரசியல் வெற்றிடத்தை ஸ்டாலின் ஏற்கெனவே நிரப்பிவிட்டதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

எனவே ஆளுமையான தலைமைக்கு தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என அதிமுகவும் திமுகவும் கூறியது குறித்து சென்னை விமான நிலையத்தில் ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கருத்து கூறவிரும்பவில்லை என தெரிவித்தார்.

Comments