நான் வெற்றிபெற்றுவிட்டேன்.. தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பே வெற்றியை அறிவித்த கோத்தபய ராஜபக்சே

யார் போட்டி கொழும்பு: இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், தான் வெற்றி பெற்றதாக கோத்தபய ராஜபக்சே அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இலங்கையில் ஒட்டுமொத்தமாக சுமார் 75% வாக்குகள் பதிவாகி உள்ளன. இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக் காலம் முடிந்ததால் அங்கு தேர்தல் நடந்துள்ளது. நாளை மாலைக்குள் இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு: இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், தான் வெற்றி பெற்றதாக கோத்தபய ராஜபக்சே அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இலங்கையில் ஒட்டுமொத்தமாக சுமார் 75% வாக்குகள் பதிவாகி உள்ளன. இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக் காலம் முடிந்ததால் அங்கு தேர்தல் நடந்துள்ளது. நாளை மாலைக்குள் இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக தமிழரசுக் கட்சி உள்ளிட்டவை சஜித் பிரேமதாசவை ஆதரிக்கிறது. இன்னொரு பக்கம் கருணா. வரதராஜ பெருமாள் ஆகியோர் கோத்தபாய ராஜபக்சேவை ஆதரிக்கிறார்கள். இதில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் பலர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்துள்ளனர்.

இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி கோத்தபய ராஜபக்சே முன்னிலை பெற்றுள்ளார். சஜித் பிரேமதாசவை விட 90697 வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே 1516260 வாக்குகள் பெற்றுள்ளார். சஜித் பிரேமதாச 14255623 வாக்குகள் பெற்றுள்ளார்.

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், தான் வெற்றி பெற்றதாக கோத்தபய ராஜபக்சே அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யார் வெற்றி என்று தேர்தல் ஆணையம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், தான் வெற்றி பெற்றுள்ளதாக கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

காலையில் இருந்து தான் முன்னிலை வகிப்பதால் கோத்தபய ராஜபக்சே இப்படி பிரகடனப்படுத்தி உள்ளார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தேர்தலில் அவரின் அறிவிப்பு கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments