பாபர் மசூதி இருந்த இடம் தங்களுடையது என சன்னி வக்பு வாரியத்தால் நிரூபிக்க முடியவில்லை: உச்சநீதிமன்றம்
டெல்லி: பாபர் மசூதி இருந்த இடம் தங்களுடையது என சன்னி வக்பு வாரியத்தால் நிரூபிக்க முடியவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அயோத்தியில் சர்ச்சைக்குரிய உள் பகுதியில் முஸ்லிம்களும், வெளி முற்றத்தில் இந்துக்களும் பிரார்த்தனை செய்தனர் என்பது தெளிவாக நிறுவப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் உள் பகுதியில் தொடர்ந்து தொழுகை நடத்தினர், முஸ்லிம்கள் மசூதியை கைவிடவில்லை. ராமரின் பிறப்பிடம் மசூதி அமைந்துள்ள உள் பகுதியில் இருப்பதாக இந்துக்கள் முழுமையாக நம்புகிறார்கள்.
அயோத்திதான் ராமர் பிறந்த இடம் என்பதை இந்துக்கள் உறுதியாக நம்புகிறார்கள். 1857-ம் ஆண்டுக்கு முன்னர் பாபர் மசூதி இருந்த இடம் முழுவதும் தங்களுடையது என்று முஸ்லீம் அமைப்பான சன்னி வக்பு வாரியத்தால் நிரூபிக்க முடியவில்லை. இவ்வாறு உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments