முதல்நாள் பொதுக்குழு.. மறுநாளே மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. அதிரடியாக களமிறங்கும் திமுக!

DMK: After General Council Meeting the party will hold secretaries meeting சென்னை: நவம்பர் 11ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்க உள்ளது. திமுக கட்சி அதிரடி மாற்றங்களுக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் வரும் 10-ம் தேதி நடக்க உள்ளது. இதில் திமுகவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இதில் ஆலோசிக்க உள்ளனர். திமுகவின் மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சில எம்பிக்கள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் இதற்கு மறுநாளே வரும் 11ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்க உள்ளது. தமிழகம் முழுக்க இருக்கும் திமுக மாவட்ட செயலாளர்கள் எல்லோரும் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். திமுக பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட உள்ள முடிவுகள் குறித்து இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளனர். திமுக கட்சியின் முக்கியமான விதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமே அதுதான் என்று திமுக தரப்பு தெரிவிக்கிறது.

கழக விதியில் முக்கிய திருத்தம் கொண்டு வரப்படும். புதிய பதவிகள் உருவாக்கப்படும் என்று கூறுகிறார்கள். இதனால் அடுத்தடுத்து இரண்டு கூட்டங்கள் நடக்க உள்ளது. இன்னும் ஒன்றரை மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்பதால், அது குறித்தும் திமுகவின் இந்த கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளனர்.

Comments