
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகில் அதிக ஆபாசப்படங்கள் பார்ப்பவர்களின் பட்டியலில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர். தடை இருக்கும் போதிலும், இந்தியாவில் மொத்தம் 44% பார்வையாளர்கள் 18 முதல் 24 வயது வரையிலும், 41% பார்வையாளர்கள் 25 முதல் 34 வயது வரையிலும் உள்ளனர். ஆபாசப்படங்கள் பார்ப்பது சட்டப்படி குற்றம் இல்லை என்றாலும் அது உங்களின் தனிப்பட்ட வாழ்விலும், காதலிலும், பாலியல் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆபாசப்படங்கள் பார்ப்பது தவறில்லை ஆனால் அதேபோல நீங்கள் உங்கள் நிஜவாழ்க்கையில் எதிர்பார்ப்பது தவறான விஷயமாகும். உங்கள் கூட்டாளருடன் உங்கள் பிணைப்பை வலுப்படுத்த நீங்கள் உண்மையிலேயே விரும்பினால், ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடுவதும், அவர்களுக்காக சிறிய விஷயங்களைச் செய்வதும் நல்ல யோசனைகளே தவிர, ஆபாசப்படங்கள் பார்ப்பது ஒருபோதும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆபாசப்படங்கள் பார்ப்பது உங்கள் காதல் வாழ்க்கையில் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
ஆபாச படத்தைப் பார்க்கும்போது, மக்கள் தங்கள் துணைகளுக்காக சில நிர்ணயிக்கப்பட்ட தரங்களை உருவாக்கக்கூடும், அவை அவர்களின் உறவுகள் மற்றும் பாலியல் வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்கும். இது ஒரு உணர்ச்சி பிணைப்பை உருவாக்குவதையும் கடினமாக்குகிறது மற்றும் உங்கள் முழு கவனமும் உடல் இன்பத்திற்கு மாறுகிறது. இது தங்கள் துணைக்காக படுக்கையறையில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மனஅழுத்தத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தும். மேலும் இதனால் காதலை காட்டிலும் உடல் தோற்றம் முன்னணியில் வருகிறது. எனவே, பெண்கள் அல்லது ஆண்கள் ஆபாசப்படத்தில் பெண்கள் மற்றும் ஆண்களைப் போல பாலியல் கவர்ச்சியாக தோற்றமளிக்க கடுமையாக முயற்சி செய்யலாம். அவர்கள் புரிந்து கொள்ளாதது என்னவென்றால், யாரும் உடல்ரீதியாக சரியானவர்களாக இருக்க முடியாது, மேலும் நிறைய ஒப்பனை மற்றும் எடிட்டிங் செய்து உருவாக்கும் திரைப்படத்தை போல சாதாரண மக்களால் செய்ய முடியாது.
ஆபாசப்படமாமானது தங்கள் கூட்டாளர்களை புறநிலைப்படுத்த மக்களை வழிநடத்தும். ஆபாச திரைப்படங்களில் வரும் பாலின சமத்துவமின்மை நிஜ வாழ்க்கையில் தம்பதிகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இதை புரிந்து கொள்ள அந்த படங்களின் தலைப்பை பார்த்தாலே போதும், அதில் பெரும்பாலும் பெண்களை சிறுமைப்படுத்தியும், அவர்களை முன்னிலைப்படுத்தியுமே இருக்கும். இதைவிட மோசமான விஷயம் என்னவென்றால், பெண்கள் மனிதர்களாக பார்க்கப்படுவதில்லை, ஆனால் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே பார்க்கப்படுகிறார்கள், எனவே, பாலியல் செயலின் போது ஒருவித வன்முறை நடத்தை இருந்தாலும், அந்த பெண் அதை விரும்புகிறார் என்பதைக் காட்டுவதன் மூலம் அது நியாயப்படுத்தப்படுகிறது. நாளடைவில் இந்த மனப்பான்மை நமக்குள்ளும் வெளிப்படும்.
உங்கள் துணையுடன் பாலியரீதியான உறவு வைத்துக்கொள்வது நீங்கள் அவர்களுடன் உடல்ரீதியாக நெருக்கமாக இருப்பதன் அறிகுறியாகும். எனவே உறவில் ஈடுபடும்போதும் உங்கள் துணையை மதிக்க வேண்டியது அவசியமாகும். ஆபாசப்படங்களை அதிகம் பார்க்கும் போது நீங்கள் அதில் நடிப்பவர்கள் பால் ஈர்க்கப்படுவீர்களே தவிர உங்கள் துணையை நோக்கி அல்ல. இது உங்கள் துணையை படுக்கையறையில் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தும், அவர்களை அசௌகரியாயமாகவும் உணர வைக்கும். இதனால் அவர்கள் உணர்ச்சிரீதியாக பாதிக்கப்படலாம்.
ஆபாசப்படங்களில் பெரும்பாலும் எதார்த்தத்தில் நடக்க முடியாத அல்லது கற்பனையில் மட்டுமே நடக்கக் கூடிய சூழ்நிலையில் உறவு வைத்துக்கொள்வது போல இருக்கும். இது உங்களுக்குள் பலவிதமான கற்பனைகளையும், ஆசைகளையும் தூண்டும். இதனை நிஜவாழ்க்கையில் செயல்படுத்த முயற்சிகும்போதுதான் சிக்கல் தொடங்குகிறது. இது உங்கள் துணைக்கு அதீத பயத்தையும், திகிலையும் ஏற்படுத்தும். இது உங்களுக்குள் பெரிய விரிசல்கள் ஏற்படவும் வழிவகுக்கும்.
ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட துணையுடன் பாலியல் உறவை ஏற்படுத்துதல், அல்லது உங்கள் கதுணையை சாமர்த்தியமாக ஏமாற்றுவது போன்ற கருத்து, நீங்கள் ஆபாச திரைப்படங்களுக்கு அடிமையாகிவிட்டால், உண்மையில் கவர்ச்சிகரமானதாக தோன்றலாம். இதன் விளைவாக அவர்கள் தங்கள் பாலியல் ஆசைகளை பூர்த்தி செய்வதற்காக தங்கள் உறவுக்கு வெளியே சில உறவுகளை தேடுவார்கள். இதனால் உங்கள் குடும்ப வாழ்க்கையில் குழப்பங்களும், விரிசல்களை ஏற்படலாம்.
உண்மையான அன்பில் அளவு ஒரு பொருட்டல்ல. படுக்கையில் நீங்களும் உங்கள் கூட்டாளியும் ஒருவருக்கொருவர் எவ்வளவு திருப்தி அடைய முடியும் என்பதற்கு அப்பால் ஒரு உறவு இருக்கிறது. பாலியல் படங்கள் அனைத்தும் திட்டமிட்டு உருவாக்கப்படுபவைதான். எனவே அதனை போல நீண்ட காலம் உறவில் ஈடுபட வேண்டும் என்று நினைக்கும் போதுதான் உங்கள் பாலியல் வாழ்க்கையில் குழப்பம் ஏற்பட தொடங்கும். மேலும், மோசமான விஷயம் என்னவென்றால், ஆபாசத்திற்கு அடிமையானவர்கள் வயதுவந்த படங்களைப் பார்ப்பதற்கும், தங்கள் கூட்டாளர்களுடன் குறைந்த உடலுறவு கொள்வதற்கும் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.
ஆபாச திரைப்படங்கள் பாலியல் ரீதியாகவும் கவர்ச்சியாகவும் தோன்றுவதற்கு ஒரு காரணம் கேமராவின் கோணம். கேமரா தான் ஒரு பாலியல் நிலையை மேலும் கவர்ச்சியூட்டும், கவர்ச்சிகரமான மற்றும் உற்சாகமானதாக தோன்றுகிறது. திரைப்படத்தைப் பார்ப்பதன் மூலம் ஒருவரை எளிதில் தூண்டிவிடலாம், ஆனால் அதற்காக அந்த செயல் மகிழ்ச்சிகரமானதாக இருக்கிறது என்று அர்த்தமல்ல. உங்கள் துணை ஒரு சரியான உருவம் அல்லது உடலமைப்பைக் கொண்டிருப்பார் என்று எதிர்பார்ப்பது உண்மையில் முட்டாள்தனம். உடல்நலத்திற்காக பொருத்தமாக இருப்பது வேறு விஷயம், ஆனால் பாலியல் வாழ்க்கைக்காக உங்கள் உடலை வடிவமைப்பது என்பது கடினம். மேலும், ஆபாச திரைப்படங்களில் நடிகர்கள் மேக்கப் செய்கிறார்கள், சரியானவர்களாக இருக்க அறுவை சிகிச்சைகள் செய்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை உங்கள் துணையிடம் எதிர்பார்ப்பது உங்கள் உறவை சிக்கலாக்கும்.
Comments