டெல்லி: மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வரவேற்றுள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜகவின் பட்னாவிஸ் தலைமையிலான அரசுக்கு எதிராக நாளை மாலை 5மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக தங்களுக்கு உள்ள ஆதரவை பாஜக நாளையே நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வரவேற்றுள்ளார். சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்சிபி தலைமையிலான மகாராஷ்டிரா முற்போக்கு முன்னணிக்கே வெற்றி கிடைக்கும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கூறுகையில், நீதிமன்றம் இன்று தனது உத்தரவை வழங்கி உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடக்கும். எங்களிடம் போதிய ஆதரவு உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இந்திய ஜனநாயகத்தின் ஒரு மைல்கல். நாளை மாலை 5ணிக்கு எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறோம். பாஜகவின் கேம் ஓவர்.." என்று தெரிவித்துள்ளார்.
Comments