
முருங்கைக்காய் 50 ரூபாயில் இருந்து 80 ரூபாய்க்கும் பீட்ரூட் 20ல் இருந்து 28 ரூபாய்க்கும் விற்கிறது.. பாகற்காய் 30ல் இருந்து 40 ரூபாய்க்கும் விற்கிறது. சாம்பார் வெங்காயம் 30 ரூபாயில் இருந்து 75 ரூபாய்க்கு விற்கிறது.
வாழைக்காய் 2 ரூபாயில் இருந்து 6 ரூபாய் ஆகவும் சௌசௌ 8ல் இருந்து 12 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இஞ்சி 80ல் இருந்து 160க்கு உயர்ந்துள்ளது. எலுமிச்சை 30 ரூபாயில் இருந்து 50. ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.
சேனைக்கிழங்கு 20ல் இருந்து 30 ரூபாய் ஆகவு உயர்ந்து உள்ளது. தேங்காய் 16ல் இருந்து 30 ஆகவும் கருணைக்கிழங்கு 30ல் இருந்து 35 ரூபாய் ஆகவும் உயர்ந்துள்ளது.
கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் தினசரி விற்பனைக்கு வரும் ஆனால் மகாராஷ்டிராவில் திடீரென பெய்த மழையால் வெங்க விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து குறைவு காரணமாகவே வெங்காய விலை 40 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் தமிழகத்தில் காய்கறிகளின் வரத்தும் குறைந்து போனதால் விலை அதிகரித்துள்ளது. வழக்கமாக சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, 300 லாரிகளில் வந்த காய்கறிகள் வரத்து, தற்போது, 200 லாரிகளாக குறைந்து உள்ளது. இதன் எதிரொலியாகவே அவற்றின் விலையும் இப்போது கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
Comments