
நாகரீகமான பேச்சுக்கும், நயமான வார்த்தைகளுக்கும், நாட்டுக்கே இலக்கணமாகத் திகழும் எங்கள் கழகத் தலைவரை பார்த்து, 'தரக்குறைவான முறையில் விமர்சனம் செய்கிறார்' என்று, அமைச்சர் பச்சைப் பொய் கூறுவது, அ.தி.மு.க.அரசின் 'வெற்று அறிவிப்புகளிலும்', 'வெட்டியான விளம்பரங்களிலும்', உள்ள பொய்யும் புரட்டும் போலவே இருக்கிறது.
நீட் தேர்வு அ.தி.மு.க. ஆட்சியில்தான் தமிழகத்திற்குள் நுழைந்தது என்பதை இன்றுவரை மறுக்க இயலவில்லை. உதய் திட்டம், ஜி.எஸ்.டி. சட்டம், முத்தலாக் போன்ற பல்வேறு, மாநில உரிமைகளைப் பாதிக்கும் திட்டங்களை எதிர்த்து விட்டு, பிறகு ஆதரித்த 'இரட்டை வேடத்திற்கு' இதுவரை பதில் இல்லை. இவை எதற்கும் முதலமைச்சர் அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.
ஆனால் இவற்றுக்கு எல்லாம் தனக்கு மட்டுமே பதில் தெரியும் என்பது போல், ஜெயக்குமார் அவர்கள் பேசுவதும், காவிரி நடுவர் மன்றம், முல்லை பெரியாறு விவகாரங்களின் அரிச்சுவடி கூட ஜெயக்குமார் அவர்களுக்குத் தெரியவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
Comments