
இதில் அதிகபட்சமாக தாம்பரத்தில் மழை பெய்தது. முடிச்சூர், சேலையூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது.
இதனால் நவம்பர் 30, டிசம்பர் 1, டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
இன்று சில மணிநேரங்களில் சென்னையில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நார்வே வானிலை மையம் கூறுகையில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.
அதன் பிறகு மழையின் அளவு குறைந்து காணப்படும். பின்னர் இரவு 7 மணி முதல் 10 மணி வரை மீண்டும் மழை வெளுக்கும். இதைத் தொடர்ந்து மழையின் அளவு குறையும். ஆக இன்று நாள் முழுவதும் சென்னையில் மழை என நார்வே வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
Comments