
பிக் பாஸ் போன்ற பணம் சம்பாதிக்கும் நிகழ்வுகளில் பிசியாக இருந்து வந்த கமலின் செயல் உயர்மட்ட நிர்வாகிகள் பலருக்கு அதிருப்தியை ஏற்ப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கிருஷ்ணகிரி ஸ்ரீகாருண்யா, சிதம்பரம் ரவி, அரக்கோணம் ராஜேந்திரன் ஆகியோர் பாஜகவில் இன்று இணைந்தனர். இந்த நிகழ்வு அந்த கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
எது எப்படியோ, திமுகவின் வெற்றியை பறிக்க பா.ஜ.க.வின் B டீமாக ஆரம்பிக்கப்பட்ட கமலின் கட்சி நிர்வாகிகள் தாய் கட்சியான பா.ஜ.க.வில் இணைவது அரசியல் நோக்கில் புதிதாக யாருக்கும் தெரியவில்லை என்பது உண்மை.
Comments