
இந்த நிலையில் நாளை இந்த வழக்கில் காலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. மகாராஷ்டிரா வழக்கில் நாளை முக்கியமான திருப்பங்கள் நடக்கும், அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் மாற்றங்களுக்கு எதிராக தற்போது காங்கிரஸ் கட்சி முதல்முறையாக போராட்டம் செய்ய தொடங்கி உள்ளது. இதுவரை மகாராஷ்டிரா பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் தலையிடாமல் இருந்தது. என்சிபி - சிவசேனா மட்டுமே முக்கிய முடிவுகளை எடுத்து வந்தது.
இதையடுத்து தற்போது முதல்முறையாக காங்கிரஸ் கட்சி களமிறங்கி போராட்டம் செய்து வருகிறது. டெல்லியில், பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் சூடுபிடித்துள்ளது. மகாராஷ்டிரா ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுவிட்டது. அங்கு ஆளுநர் சட்டத்தை மீறி நடந்து கொண்டார் என்று போராட்டம் செய்து வருகிறார்கள்.
அதேபோல் மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் கட்சியினர் ஆளுநர் மாளிகைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆளுநருக்கும், பாஜகவிற்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பலகைகளுடன் அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் மகாராஷ்டிரா அரசியல் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சி இது தொடர்பாக ராஜ்ய சபா, லோக்சபாவிலும் குரல் எழுப்பியது. அதேபோல் சிவசேனாவும் லோக்சபாவில் கடுமையான வாதங்களை வைத்தது. இதனால் இரண்டு அவையிலும் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் ராஜ்யசபா நாளை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Comments