ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா; திமுக வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை ஐகோர்ட்,  திமுக, ஆர்கே நகர், பணப்பட்டுவாடா, தேர்தல் ஆணையம்சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது நடந்த பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும் விசாரணை நடத்தின. விசாரணை அறிக்கையை சீல் வைத்த உறையில் வைத்து தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை பார்வையிட அனுமதி கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், ரகசிய விசாரணை அறிக்கையை, பொதுவில் வெளியிட முடியாது என தேர்தல் ஆணையம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, விசாரணை அறிக்கையை பார்வையிட அனுமதி அளிப்பது குறித்து டிச.,18 க்குள் பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Comments