
மாஃபா பாண்டியராஜன் தனது பேச்சில், ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை. மிசா இருந்த நேரத்தில் கைதானார். அவரை அடித்ததாக கூறுகிறார்கள். ஆனால் அவரை மிசாவிற்காக அடிக்கவில்லை. அவர் மோசமான வழக்கில் சிறைக்கு சென்று இருந்தார். அதனால் அடித்தார்கள்.
அவருக்கும் மிசாவிற்கும் தொடர்பு கிடையாது. அவர் மிசாவில் சென்றதாக மக்களை ஏமாற்றுகிறார். அவர் பாலியல் வழக்கில்தான் சிறை சென்றார். அதை மக்களுக்கு தெரியாமல் மறைகிறார், என்று மாஃபா பாண்டியராஜன் குறிப்பிட்டு இருந்தார்.
மாஃபா பாண்டியராஜன் அளித்த இந்த பேட்டி திமுகவினர் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டாலினின் அரசியல் பணிகளை, தியாகத்தை மாஃபா பாண்டியராஜன் கொச்சைப்படுத்திவிட்டார். அவருக்கு மக்கள் கடுமையான பாடம் புகட்டுவார்கள் என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாளை சென்னையில் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக திமுக கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளனர். சென்னை மற்றும் திருவள்ளுவர் மாவட்ட திமுகவினர் நாளை சென்னையில் பல இடங்களில் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். அதேபோல் ஆவடி மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிராகவும் போராட்டம் செய்ய இருக்கிறார்கள்.
இன்றும் சென்னையில் பல இடங்களில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக திமுகவினர் போராட்டம் செய்தனர். அவரின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக தலைவர் ஸ்டாலின் மிசாவில் கைதானது குறித்த மாஃபா பாண்டியராஜன் விமர்சனம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
Comments