
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போது நடிகர் ரஜினி, "என்னை பாஜக தலைவர் என்பது போல நிறுவ முயற்சி நடக்கிறது. பாஜகவின் நிறத்தை எனக்கு பூச முயற்சி நடைபெறுகிறது. திருவள்ளுவர் நாத்திகர் இல்லை.. அவர் ஆத்திகர்.. திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல எனக்கும் பூச முயற்சி நடக்கிறது. இந்த காவிக்கு திருவள்ளுவரும் சிக்க மாட்டார்.. நானும் சிக்க மாட்டேன்" என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். ரஜினியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்த தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே போயஸ் கார்டனில் தனது வீட்டின் அருகே திரும்பவும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் சொல்லும்போது, "நான் எப்போதும் வெளிப்படையாக பேசி வருகிறேன். நான் அரசியல் கட்சி தொடங்கும் வரை சினிமாவில் நடிப்பேன். திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியதை ஊடகங்கள் பெரிதாக்கிவிட்டன. நான் பாஜகவில் சேரப்போவதாக வரும் தகவல் பற்றி கேட்கிறீர்கள். அதை அவர்கள் சொல்வார்கள். ஆனால் முடிவெடுக்க வேண்டியது நான்தான். அதற்காக அவர்கள் என்னை மட்டுமே நம்பி இருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது. அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும். இந்திய பொருளாதாரம் மந்தமாகத்தான் உள்ளது. அதை மீட்க என்ன செய்யவேண்டுமோ அதை செய்ய வேண்டும். தமிழகத்தில் சரியான, ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இன்னமும் உள்ளது" என்றார்.
Comments