
இந்த நிலையில் இந்த தேர்தல் நிதி பத்திர விவகாரத்தை காங்கிரஸ் கட்சி லோக்சபா மற்றும் ராஜ்ய சபா இரண்டிலும் எழுப்பியது. காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து திமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்த தேர்தல் நிதி பத்திர பிரச்சனையை குறித்து பேசி அமளியில் ஈடுபட்டது. காங்கிரஸ் தொடர்பாக பேசி மனிஷ் திவாரி, தேர்தல் நிதி பத்திரம் என்பது பாஜகவின் நலனுக்காக கொண்டு வரப்பட்டது.
இதன் மூலம் பாஜக பல கோடி நிதிகளை முறைகேடாக பெற்று இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பாஜக முறைகேடாக பணம் பெற்றுள்ளது. அதேபோல் மாநில தேர்தலில் தேர்தல் நிதி பத்திரத்தை பயன்படுத்த பாஜக ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. பிரதமர் மோடி நேரடியாக இதில் அழுத்தம் கொடுத்துள்ளார்.
இது ஆர்டிஐ மூலம் தெரிய வந்து இருக்கிறது. யார் யாரோ மறைமுகமாக பாஜகவிற்கு பணம் கொடுத்துள்ளனர் என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் லோக்சபா தலைவர் ஆதிர் ரஞ்சன் ஜோதி, இந்த தேர்தல் நிதி பத்திரங்கள் பற்றி உடனடியாக விசாரிக்க வேண்டும். இவை எல்லாம் ஊழல்கள்.
இதில் நிறைய கார்ப்ரேட் நிறுவனங்களின் தலையீடு இருக்கிறது. அரசு இந்த விவரங்களை மொத்தமாக வெளியிட வேண்டும். இது அதிகாரபூர்வ அரசியல் லஞ்சம். கருப்பு பணத்தை வெள்ளையாக்க வேண்டும் செய்ய அரசு கொண்டு வந்த கொள்ளை நோக்கம் கொண்ட திட்டம் இது என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்பி சசி தரூர், முறைகேடு செய்ய வேண்டும். பணம் பெற வேண்டும் என்பதற்காகவே தேர்தல் நிதி பத்திரங்களை பாஜக கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பெரிய கார்ப்ரேட் நிறுவனங்கள் காட்சிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, ஆட்சியை கட்டுப்படுத்தி வருகிறது, என்று குறிப்பிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக கட்சியின் சபாநாயகர் ஓம் பிர்லா, அவையில் காங்கிரஸ் கட்சியினர் எல்லை மீறி நடந்து கொள்கிறார்கள். அவர்கள் நாகரீகமாக பேச வேண்டும். இந்த தேர்தல் நிதி பத்திர விவகாரத்தை வேண்டும் என்று எழுப்பி பிரச்சனை செய்து வருகிறார்கள், என்று குறிப்பிட்டார்.
Comments