ஜெயலலிதா எப்படி இருப்பாங்க தெரியுமா? படம்னா கூட ஒரு ஞாய தர்மம் வேண்டாமா விஜய்

மரண கலாய் சென்னை: தலைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்திருக்கின்றனர்.
விஜய் இயக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படம். நடிகை கங்கணா ரணாவத் ஜெயலலிதாவாக நடிக்கிறார்.

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு #Thalaivi என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள் செம கடுப்பாகியுள்ளனர். மேலும் போஸ்டரையும் இயக்குநர் ஏஎல் விஜயையும் மரண கலாய் கலாய்த்திருக்கின்றனர்.

எப்படி பாத்தாலும் ஜெயலலிதா மாதிரி இல்லையே என்கிறார் இந்த நெட்டிசன்.

சிலிக்கான் போஸ்டரை விட பயங்கரமாக உள்ளது தலைவி படத்தின் டீசர் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன். ஜெயலலிதாவுக்கு அவர்கள் செய்திருப்பது அருவருப்பாக உள்ளது.. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.. வெட்கக்கேடு.. என்கிறார் இவர்.

இந்த போஸ்டரை பார்த்த ஜெயலலிதாவோட ஆத்மாவுக்கே கோபம் வந்துடும் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

கங்கனா ரனாவத்தும் ஜெயலலிதாவும் எங்கய்யா? இதை பார்த்தா தீபா மாதிரியில்ல இருக்கு என்கிறார் இந்த நெட்டிசன்.

சுத்தமா செட் ஆகவே இல்ல... என்று கூறுகிறார் இவர்.

ஜெயலலிதா எப்படி இருப்பாங்க தெரியுமா? படம்னா கூட ஒரு ஞாய தர்மம் வேண்டாமா விஜய்!! என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

இது ஜெயலலிதா நாங்க நம்பனும்.. என விளாசுகிறார் இந்த நெட்டிசன்.

கங்கனாவ ஜெயலலிதா மாதிரி மாத்துறதுக்கு ஏதோ மெஷினுக்குள்ள அனுப்பி முழுசா மாறுறதுக்கு முன்னமே பாதில எடுத்துட்ட மாதிரி இருக்கு. கங்கனா மாதிரியும் இல்ல. ஜெயலலிதா மாதிரியும் இல்ல. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

ஜெயலலிதா போல இருக்கும் விந்தியா என்று கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்.

Comments